கொரோனாவால் அடுத்தடுத்து வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள்

145shares

உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 30,879 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் லண்டனில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் பெல்தம் பகுதியில் நேற்று உயிரிழந்தார்.

அதேபோன்று சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ். புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிஸிற்கு சென்ற 59 வயதான நபரே கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் மரணமடைந்த ஓய்வுபெற்ற வைத்தியருடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி