கொரோனா அச்சுறுத்தல்! யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

55shares

யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு பூர்த்தி செய்ய முடியாது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 110 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை இருந்து விடுதலை செய்யப்பட்ட 110 கைதிகளும் தனி நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தங்களுக்குத் தாங்களே பிணையில் கையப்பமிட்டு நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவர்களின் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மேலும் பல கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி