திருகோணமலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை!

28shares

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரம்,பேராறு போன்ற பகுதிகளை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து கந்தளாய் பேருந்து நிலையத்தினை இன்று சிரமதானம் செய்து கிருமி அழிக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த வேலைத்திட்டம் கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் இராணுவ அதிகாரிகளின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாயில் ஊரடங்கு சட்டத்தினை மீறிச்செயற்பட்ட பதினாறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்