தம்புள்ள சந்தையில் பதற்றம்! அதிரடிப்படையினரை குறுக்கிட்ட வர்த்தகர்கள்!

57shares

ஸ்ரீலங்கைவையும் மெல்ல ஆக்கிரமிக்கும் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் நடவடிக்கையாக தம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த பொலிஸ் அதிரடி படையினர் முயற்சித்த போது, அங்கு வர்த்தக நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையினர் தங்களது கடமைகளை செய்ய ஆரம்பித்த போது, வர்த்தகர்கள் சிலர் குறுக்கிட்டதால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து தத்தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்ற ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் சூழலில் இலங்கையிலும் முற்றுமுழுதான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் மக்களின் நலன் கருதி அத்தியாவசிய சேவைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கோடு நாடாளாவிய ரீதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் கிருமிநாசினிகள் விசிறப்படுகின்றன.

இது போன்ற நடவடிக்கை இன்றைய தினம் தம்புள்ள சந்தைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டபோதே வர்த்தகர்கள் இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்