ஊரடங்கு தளர்த்தப்படும் போது செய்ய வேண்டியது என்ன? ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

234shares

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றையதினம் ஊரடங்கு ஆறு மணிநேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏனைய பகுதிகளில் பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா,

“ஊரடங்கு தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது.

அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளது” என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்