கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் புதிய திட்டம் இன்று முதல் ஸ்ரீலங்காவில்!

496shares

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்லும் நபர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கையொன்று ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லும் நபர்களை தனிமைப்படுத்தி இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கும் நடவடிக்கையை மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி முன்னெடுத்துள்ளது.

இந்த செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள வீட்டிற்கு சென்ற நபர் ஒருவர் அவரது வீட்டிலே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த் தடுப்புச் செயற்திட்டத்தின் கீழ் வெளி மாட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் வருவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினரும், பொலிஸார் உட்பட பாதுகாப்பு படையினருடன் இணைந்து இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய கொழும்பில் இருந்து ஒருவர் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தத் தகவலை அறிந்த பொலிஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு சென்று அவரை 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு வெளியேற வேண்டாம் எனத் தெரிவித்து கதவில் கொரோனா தனிமைப்படுத்தல் எச்சரிக்கை அறிவிப்பையும் பொலிஸார் ஒட்டியுள்ளனர்.

இதேவேளை வெளி மாவட்டங்களில் இருந்து வருபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்