யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய சுகாதார சேவை பணிப்பாளர்

238shares

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மட்டும் ஸ்ரீலங்காவில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றுள்ளவர்வர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக...

Posted by Thangamuthu Sathiyamoorthy on Wednesday, April 1, 2020

பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா COVID - 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி