இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் தொடர்பில் வெளிவந்த தகவல்

277shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மூன்றாவது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று விளக்கமளித்துள்ளார்.

73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது இவர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியென நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டார்.

இந்த நோயாளி அடையாளங்காணப்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் (On Admission Death) மரணமானார்.

இந்த நோயாளி நீரிழிவு , இரத்த அழுத்தம் , நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயாளி நோய் உத்சக்கட்டத்தை எட்டிய வேளையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்

இவர் IDH இற்கு மாற்றப்பட்டு ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த 2ஆவது நபரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை