நாயை கட்டி வைத்ததால் அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதவான் கொடுத்த உத்தரவு

430shares

குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அனைவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றத்தின் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாயை இளைஞன் கட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் நாயின் உரிமையாளர்கள் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன் உயிரிழந்துள்ளார்

இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this?

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி