யாழில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் திடீர் மரணம்!

526shares

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு இரத்த மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் வீசிங் நோயாளி. கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது" என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை