இத்தாலியிலிருந்து இளைஞர் விடுத்துள்ள அவசர கோரிக்கை! சற்று முன்னர் வெளியான தகவல்

1036shares

இரண்டாம் இணைப்பு

இத்தாலியின் எம்.எஸ்.சீ மெக்னிபிகா கப்பலில் உள்ள இலங்கையரை கடற்படையினர் சற்றுமுன்னர் வெளியேற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில அவரை 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பூசா கடற்படை முகாமிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு

இத்தாலியின் எம்.எஸ்.சி கப்பலில் பணிபுரியும் இலங்கை ஊழியரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றான இத்தாலியின் எம்.எஸ்.சி கப்பலில் பணிபுரியும் இலங்கை ஊழியராக பணிபுரிகின்றார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தன்னை மீட்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் குறித்த ஊழியர் தன்னை இலங்கை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டுமென சமூக வலைத்தளத்தில் காணொளி மூலமாக கோரியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பதில் வழங்கியுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக,

அந்த இளைஞரின் வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அவரை மீட்டு நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி