யாழில் ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு! சுற்றிவளைத்த இராணுவத்தினர்

440shares

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா என பொலிஸாரால் கூறப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் உள்ள வீடொன்றில் இன்று மாலை அவரது நண்பர்களால் இணைந்து நடத்தப்பட்டது.

இது தொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போதே 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


you may like this?

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்