ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

363shares

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிய செய்தி குறித்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியம், அந்த செய்தியை நீக்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றினால், உயிரிழந்தவர்களை, அல் சார்ஜா பிரதேசத்தில் புதைக்காமல் எரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், தமது நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும், இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“எந்தவொரு கொரோனா வைரஸ்தொற்றாளர்களின் உடல்களையும் புதைப்பதை ஐக்கிய அரபு இராச்சியம் தடை செய்யவில்லை, அதேவேளை, தகனம் செய்யவும் நம் நாடு அறிவுறுத்துவதில்லை.” என தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கு சவால் விடுக்கும் வகையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்கின்ற நிலையில், சார்ஜா ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களை, சார்ஜாவில் அடக்கம் செய்யாமல் ஒரு தனி பகுதியில் அடக்கம் செய்யுமாறு, சார்ஜாவின் ஆட்சியாளர் சுல்தான் பின் முஹமட் அல்-காசினி உத்தரவிட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளதோடு, சார்ஜாவில் போதிய இடவசதி இன்மையே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் உள்ளுர் ஊடகங்களில் செய்தி திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.” என ஐக்கிய அரபு இராச்சிய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை தூதரகம் கடுமையாக கண்டிப்பதாகவும், மற்றும் அனைத்து வலைத்தளங்களிலிருந்தும் செய்திகளை அகற்றவும், சரியான விளக்கத்தை வெளியிடவும் இந்த தவறான தகவலை சரியாக பதிவு செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.” என தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை