ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

84shares

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதிகளில் வாகன அனுமதிப் பத்திரங்களின் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்மைய, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஊரடங்கு உத்தரவு காலப்பகுதிக்கான அனுமதி பத்திரங்களின் கால அவகாசத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸ் ஊடகப் பிரிவினர் தெரிவித்ததாவது, அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப்பத்திர காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக குறிபபிட்டுள்ளனர்.

அதேபோன்று, மேலதிகமாக துறைமுகம், கப்பல் நிறுவனம், சுங்கம், குடிவரவு, சுகாதாரம், பெற்றோலியம், தொலைத்தொடர்பு, புகையிரதம், திறைசேரி, மத்திய வங்கி உள்ளிட்ட அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் மற்றும் தொழில்சார் அடையாள அட்டைகளின் காலமும் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி