யாழ் மக்களால் வரவிருக்கும் பெரும் ஆபத்து! மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

666shares

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கும் போது, பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்து கொள்வது தான் இதற்கான தீர்வாக அமையும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வுகானில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து அந்நாடு முழுமையாக மீண்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறது.

கொரோனாவை இலகுவாக வெற்றி கொண்டதன் பின்னணியில், சமூக இடைவெளியை தொடர்ச்சியாக பொது மக்கள் பேணி வந்ததாலேயே மிக இலகுவாக தாம் அதிலிருந்து மீண்டதாக சீனா அறிவித்திருக்கிறது.

இதனைப் பின்பற்றி இலங்கையில் தொடர்ச்சியாக போடப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஏதுவான காரணிகள் ஏற்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதனை மையமாக வைத்தும், நாட்டின் பொருளாதார நெருக்கடியினை காரணமாகக் கொண்டும், அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தியது.

ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசாங்கமும் பொலிஸாரும் விதித்திருந்தனர். எனினும், தற்போது பொது மக்கள் கொரோனாவின் பேராபத்தை உணராது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களின் செயல்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட பொலிஸார் பொது மக்கள் தொடர்ச்சியா இவ்வாறு நடந்து கொண்டால் மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதுடன், பொது மக்களுக்காக பொதுப் போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் மக்களும், சந்தைகளுக்குச் செல்பவர்களும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் கொரோனாவை மறந்து செயல்படுகின்றார்கள் என்று கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடருமாயின் கடுமையான சட்டங்களை மீண்டும் இங்கு அமுல்படுத்த நேரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவதான் மூலம் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையினை வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே பொது மக்கள் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்