விளக்கமறியலில் உள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்கள் - கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை - முக்கிய செய்திகள்

409shares

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் இன்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, விடுதலைப் புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வழக்கின்றி குறித்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கும் தேவை இருக்கின்றதா என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திலும் அமுனுகம இதனை குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழர்கள் வழக்கு விசாரணைகள் இன்றி பல ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யுமாறு ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுபோன்று மேலும் பல செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள் காணொளி வடிவில்

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி