ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து! ஆபத்தான நிலையில் முதியவர்!

126shares

கிளிநொச்சி-பளை முல்லையடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 72 மற்றும் 51 வயதுடையவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் காணப்படுகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய இருவரும் புதுக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்திற்குள்ளான இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி