மக்கள் எதிர்ப்பையடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட நடவடிக்கை!

48shares

செட்டிகுளம் கன்னாட்டி மக்கள் விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்கு அண்மையில் மண் அகழ்வினை மேற்கொள்வதனால் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் பகுதியிலுள்ள ஐந்து குளங்களின் கீழ் 320 ஏக்கர் பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் வாழ்வாதாரமாக விவாசாயத்தையே மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் பல டிப்பர்களில் மண் அகழப்பட்டு மண் கொண்டு செல்லப்படுகின்றது.

பரராஜகுளம் , கொல்லங்குளம், துத்திக்குளம், மரக்காரம்பளை குளம், ஊறங்குளம் போன்ற ஐந்து குளங்களுக்கான நீர் கன்னாட்டி பகுதியில் இருந்தே செல்கிறது. இவ்வாறு மண் அகழ்வினால் இப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகின்றது. அதனால் மண் அகழ்வினை உடனடியாக நிறுத்த வேண்டுமென கிராம மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் அலைக்ஸ் யூட் மண் அகழ்வில் ஈடுபடும் குறித்த நபர்களிடம் அனுமதி பத்திரங்களை காண்பிக்குமாறு கோரிய போது பிரதேச சபையின் அனுமதி இருந்திருக்கவில்லை.

உடனடியாக மண் அகழ்வினை நிறுத்துமாறும் ,உரிய முறையில் அனுமதியை பெறுமாறு கோரி மண் அகழ்வினை நிறுத்தியதையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திலிருந்து அகன்றிருந்தனர்.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர், கன்னாட்டி பிரதேச பங்குத்தந்தை, பிரதேச மக்கள், கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்