விடுதலைப்புலிகளின் சீருடை மீட்கப்பட்ட இடத்தில் எலும்புக்கூட்டுடன் துப்பாக்கி!

602shares

முகமாலை பிரதேசத்தில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுகள் இடம்பெற்று வருவதாகவும், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிறுவன பணியாளர்களாலேயே பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு குறித்த எலும்புக்கூடுகள் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த பகுதி யுத்த காலத்தின் போது விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!