கோட்டாபய ஆட்சியின் விளைவே இது! முஜிபுர் ரஹூமான் சாடல்

70shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறுமாத காலம் கடந்துள்ள நிலையில் அவர்கள் வழங்குவதாக குறிப்பிட்ட எந்த சலுகைப் பொதிகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

ராஜபக்க்ஷக்களின் ஆட்சிக் காலங்களில் மக்களுக்கான எந்தவித சலுகைப் பொதிகளும் பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியமில்லை. ராஜபக்ஷக்களின் ஆறுமாத ஆட்சியின் விளைவே மாளிகவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறுமாதகாலம் கடந்துள்ள நிலையில் அவர்கள் வழங்குவதாக குறிப்பிட்ட எந்த சலுகைப் பொதிகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. தற்போது மக்களது பணத்தை அரசாங்கத்துக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டுகோள விடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் பெரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களது பாதுகாப்புக்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.?

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியசாலைக் குழுவினர் மூன்று அல்லது நான்கு பேர் ஒரே அறையில் தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?