கொழும்பில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட பெண்! விரைவில் பரிசோதனை அறிக்கை

42shares

கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்ட பெண் ஒருவர் ஹோமாகமையில் தற்காலிக தங்குமிட விடுதியை திறந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்ட 45 வயதான குறித்த பெண் 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் சம்பந்தமாக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்க உள்ளதாக ஹோமாகமை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

தங்குமிட விடுதிகள் திறக்கப்படுவது தடை செய்யப்படடுள்ள நிலையில், குறித்த பெண் சட்டவிரோதமாக அதனை திறந்துள்ளார். அங்கு சேவையாற்றிய இளைஞர், விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் இந்த பெண்ணுடன் ஆண் ஒருவர் விடுதிக்கு வந்ததாகவும் அவர் பாதுகாப்பு படையுடன் சம்பந்தப்பட்ட நபர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபரை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


you may like this?
இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்