கொழும்பில் மூன்று பெண்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

202shares

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் நிவாரணம் பெற்றுக்கொள்வதற்காக ஒன்று திரண்ட மக்களால் மூன்று பெண்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவந்துள்ளது.

இவர்களின் மரணத்திற்கு மக்கள் நெரிசலால் சுவாசத் தொகுதி தடைப்பட்டமையே காரணம் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் காஜ்சனா நெரஞ்சலா டி சில்வாவின் உத்தரவுக்கமைய, பிரேத பரிசோதனைகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்தார்.

இதன்போதே மரணத்துக்கு காரணம் நெரிசலினால் சுவாசத் தொகுதி தடைப்பட்டமையே என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுவதற்காக சடலங்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, எவ்வித கவனமும் இன்றி மிக ஆபத்தான முறையில் நிகழ்வொன்றினை ஏற்பாடுச் செய்தமை, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அதனை மீறி மக்களை ஒன்று திரட்டியமை, கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணாமல் நடந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாக மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட , உதவித் தொகையை பகிர்ந்த வர்த்தகர் அவரது மகன் உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகரான தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சரூக், அவரது மகன் மொஹம்மட் இம்தியாஸ், மொஹம்மட் நசீர், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான், மாகும்புர பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் யோகேஸ்வரன், நுவரெலியாவைச் சேர்ந்த முபாரக் சங்தூஸ், லிந்துலையைச் சேர்ந்த மருதமுத்து சிவபாலம், மட்டக்குளியைச் சேர்ந்த இமார் பாரூக் அஹமட் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.


you may like this?
இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!