பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

13shares

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துத் தொகுதி யாவும் வெள்ளிக்கிழமை (22) சவளக்கடை பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரபிடம் கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் குழுவினர் வழங்கி வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணனின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆயுர்வேத நோய் சக்தியை அதிகரிக்கவும் இம்மருந்துகள் சவளக்கடை பொலிஸாருக்கு வழங்கவென கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!