யாழ்ப்பாணம் - பாண்டியன்தாழ்வு பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாதா கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது – 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்ற நபரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றது.
பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.