விகாரைக்குள் கைவரிசையை கட்டிய திருடர்கள்

46shares

திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்திலுள்ள விகாரையொன்றுக்குள் கூரை மேல் ஏறி உள் நுழைந்து கணினி மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைபாட்டை நேற்று (22) மாலை கந்தளாய், 94ஆம் கட்டை – சைலாறாம விகாரையின் விகாராதிபதி அஸ்கிரிய புஞ்யரத்ன தேரர் பதிவு செய்துள்ளார்.

விகாரையின் கூரை மேல் ஏறி உள்ளே நுழைந்த திருடர்கள் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பணத்தையும் மடிகணினி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த சொக்கோ பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குறித்த இடத்தைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அடையாளங்களை இட்டுள்ளனர்.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட 15 உத்தரவுகள்! ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்

முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட 15 உத்தரவுகள்! ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது