யாழ். பல்கலைக்கழகத்துக்கு தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு அமைப்பு

32shares

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண் அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென யாழ். பல்கலைக் கழக பேரவையினால் மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறைச் சிரேஸ்ட பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் மற்றும் பௌதிகவியல் துறைச் சிரேஸ்ட பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்..

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாகக் கோரப்பட்டிருந்தது.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் ஜீன் 9 ஆம் திகதி ஆகும்..

சுற்றறிக்கையின் படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க சிரேஸ்ட பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்