நள்ளிரவில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! நீதவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

278shares

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கடந்த 15.5.2020 அன்று நள்ளிரவு வீடு ஒன்றில் 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன. இவ்வாறு களவாடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கொள்ளை இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மற்றுமொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி காணொளி பதிவுகளை விசாரணைக்காக தந்துதவுமாறு உரிமையாளரிடம் பொலிஸார் கேட்டிருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன் சி.சி.டிவி பதிவுகளை வழங்காது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுத்துவிட்டார்.

இவ்வாறு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டு உரிமையாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது மன்றில் வழக்கிற்காக முன்னிலையான வீட்டு உரிமையாளரான பிரதிவாதியிடம் உடனடியாக சி.சி.டிவி அனைத்தையும் விசாரணைக்காக காண்பிக்கும் படியும் அதை காண்பிக்க தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பதில் நீதிமன்ற நீதிவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் வீட்டில் உள்ள சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். மேலும் மேற்கொள்ளப்பட்ட களவு தொடர்பில் சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பதில் நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்