முகமாலை பகுதியில் நேற்றைய தினம் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் எலும்புக்கூட்டுடன் துப்பாக்கி காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்.
நேற்று பிற்பகல் குறித்த பகுதிக்கு சென்ற நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும், விடுதலைப்புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது.