யாழிலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை

58shares

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம்.

ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, ஆலய குருக்ககள் மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.

கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி நடக்கவுள்ளோம்.

அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி