திடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்

330shares

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம் மனோகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வயலில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

45 வயதான அவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார்.

வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது வயலில் வீழ்ந்து மரணமடைந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மரணத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணம் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!