மோடியிடம் கோட்டாபய கேட்ட உதவி! உடனடியாக கிடைத்த பதில்

509shares

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, கொரோனாவை கட்டுப்படுத்தவும், ஸ்ரீலங்காவின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீர் செய்ய, இந்தியா ரூ.8 ஆயிரத்து 360 கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கோட்டாபய ராஜபக்ச ரூ.3 ஆயிரத்து 40 கோடி கேட்டிருந்தார். அதனுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று, இந்திய நிதி உதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமாணப் பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடியிடம் கோட்டாபய கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஒருநாளில் ஸ்ரீலங்காவிற்கு உதவத் தயார் என்று தூதுவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு நாடுகளின் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களில் எப்போதும் ஒருவரொருக்கொருவர் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியா இலத்திரனியல் வர்த்தக வசதிகளுடன் வர்த்தக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் பொறிமுறை ஒன்றுக்கு தயாராகிவருகிறது என்றும் கோபால் பக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா நீண்டகால அடிப்படையில் போக்குவரத்து, வர்த்தக பொருளாதார விடயங்களில் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!