சடுதியாக அதிகரிக்கும் கொரோனாவால் நிலை தடுமாறும் ஸ்ரீலங்கா!

264shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 1,162 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 21 பேரும் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 444 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 79பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளது.

குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 07 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 674 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் 20 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 313 ஆக உயர்வடைந்துள்ள நிலையில்,

கொரோனா தொற்று உறுதியாகியவர்களில் 444 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!