கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

210shares

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தலை மறந்து செயல்படுவதாக சுகாதார பிரிவினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று காலை 5மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில், பேருந்துகளிலும் சந்தைகளிலும் பொதுவெளிகளிலும் கூடும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை மறந்து செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

எனினும், கொரோனா பரவுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருக்கின்றன என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதே நேரம் கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பபாளர் அனில் ஜாசிங்க எச்சரித்திருந்தார்.

எனவே பொது மக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பொது மக்களும் பேருந்து சாரதிகளும், நடத்துநர்களும் அதனை மறந்து செயல்படுவது கவலையளிக்கும் விடயமாக மாறியிருக்கிறது.

குறிப்பாக யாழ்ப்பாண பேருந்துகளிலும் பொதுச் சந்தைகளிலும் பொது மக்களி சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் நடந்துகொள்வது வேதனையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை என்பதனை பொதுமக்கள் மறக்க வேண்டாம் என்றும், சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!

இது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன்! கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி

இது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன்! கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி