குவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா?முக்கிய செய்திகள்

278shares

குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை கொண்டு அவர்களை சிலர் 'குண்டுதாரிகள்' என்று குறிப்பிடப்பட்டமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கண்டித்துள்ளார்.

குவைத்தின் தூதுவர் காலிப் பூ தாஹருடன், சஜித் பிரேமதாச நேற்றைய தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், குவைத்தில் பணியாற்றிய நிலையில் இலங்கை திரும்பியுள்ளவர்களை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் அவர்களை வீரர்களாக போற்றியவர்கள் தற்போது அவர்களுக்கு குண்டுதாரிகள் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடும் புலம்பெயர் பணியாளர்களுக்கு இலங்கை மக்கள் நன்றி கூறவேண்டும்.

அத்துடன் புலம்பெயர் பணியாளர்களுக்கு அரசாங்கம் மேலும் பல உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற மேலும் பல விரிவான செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள்

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்