லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

1072shares

கொரோனா வைரஸை அடுத்து தமது திருமணத்தை இரத்து செய்ய வேண்டிய நிலையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழரான மருத்துவர் மற்றும் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த தாதி லண்டனில் தாம் பணிபுரியும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்டனர்.

ஜான் ரிப்பிங்(34) மற்றும் இலங்கைத் தமிழரான அணணாலன் நவரட்ணம் இருவருமே லண்டனின் செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் தரம் II பட்டியலிடப்பட்ட தேவாலயத்தில் தமது திருமணத்தை நிறைவேற்றினர்.

சாட்சிகளில் ஒருவர் திருமண நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியதால் விருந்தினர்கள் தொலைவில் இருந்து அதனைப் பார்த்து மகிழ்ந்தனர்.

எல்லோரும் நலமாக இருக்கும்போது தமது திருமணத்தை நடத்த முடிவு செய்ததாக புதுமண தம்பதி தெரிவித்தது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதமே தமது திருமணத்தை நடத்த தம்பதி முடிவு செய்தபோதிலும் வடக்கு அயர்லாந்திலிருந்து மணப்பெண்ணின் உறவினர்களும் ஸ்ரீலங்காவிலிருந்து மாப்பிள்ளையின் உறவினர்களும் வருகை தரமுடியாமல் இருக்கும் என்ற காரணத்தால் அந்த முடிவை அவர்கள் இரத்து செய்தனர்.

அதற்கு பதிலாக, தெற்கு லண்டனில் உள்ள டல்ஸ் ஹில் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், திருமணத்தை நடத்த முடிவுசெய்து, நடத்திவைத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!