தொண்டமானின் ஒரு வருட நிறைவு தினத்தில் அவரது கனவு நிறைவேறும் : அரசாங்கத்தின் வாக்குறுதி

46shares

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க நுவரெலியா மாவட்ட பல்கலைக்கழகம் கொட்டகலையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஒரு வருட நிறைவு தினத்தில் அவரது கனவு நிறைவேறும் வகையில் மேற்படி பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் ஏக தலைவனாகவும், பேரம் பேசும் சக்தி கொண்ட ஒரு வரலாற்று பதிவேடாகவும் திகழ்ந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.

இவர் இறப்பதற்க முன் பிரதமர் மஹிந்தவை சந்தித்து தோட்ட தொழிலாளர்கள் பற்றி கலந்துரயாடியதாகவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்