தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

61shares

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் எச்.ஐ.வி, அம்மை போன்று கொரோனா வைரஸும் தொடர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை நான்கு வைரஸ்கள் சளியைப் பரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஐந்தாவது வைரஸாக மாறக் கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சாரா கூறும்போது,

“இந்த வைரஸ் இங்குதான் இருக்கப் போகிறது. நாம் அந்த வைரஸுடன் எவ்வாறு பாதுகாப்பாக வாழப் போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இது குறைந்த காலக்கட்டத்தில் முடியக் கூடியது அல்ல” என்றார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 58,07,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,10,388 பேர் குணமடைந்தனர். 3,57,807 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்