ஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து! வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

26shares

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கொப்புகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டினுள் ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா எச்சரித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும், கடற்படையினருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

இதுவரையில் உலக சுகாதார அமைப்பு ஆசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இரண்டாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நோயாளிகளை முகாமைத்துவம் செய்வது அத்தியாவசியமானதாகும்.

இந்த நடவடிக்கைக்காக சமூக இடைவெளியை கடைபிடித்தல், சுய தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய சுகாதார பாதுகாப்புடன் செயற்படுதல் கட்டாயமாகும்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்காக வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!