ஸ்ரீலங்கா அரசு மீது இடிவிழும்! அத்துரலியே ரதன தேரர் ஆவேசம்

386shares

அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையே இறக்குமதி செய்ய வேண்டும்.

அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ள இவர்களுக்கு இருக்கும் சுயநலத்தை பாருங்கள். மோசமான பேராசையால் நாட்டுக்கு செய்யும் அநியாயம். இவர்கள் மீது இடிவிழும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்