மட்டக்களப்பில் இன்றுமாலை துயரம் -சடுதியாக திரும்பிய வாகனத்தால் பறிபோன இளைஞனின் உயிர்

409shares

மட்டக்களப்பு பாசிக்குடா வீதி பேத்தாழையில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனா்.

பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என்.முகம்மது நைறுாஸ் வயது (18) என்ற இளைஞனே உயிாிழந்துள்ளாா்.

குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரே சென்ற சிறிய கன்ரா் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறுபக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவா் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளாா்.

கல்குடா பொலிசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் கன்ரா் சாரதியை கைது செய்துள்ளதுடள் கன்ரரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பாிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாா் மேலும் தொிவித்தனா்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில்  முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!