பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

31shares

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொதுச் சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. சகல பஸ்களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸகளை சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!