ஸ்ரீலங்காவில் 5000 பேருக்கு கொரோனா சந்தேகம்! முழு விபரம் இதோ...

426shares

ஸ்ரீலங்காவில் கொரோனா சந்தேகத்தின் பேரில் 5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1800 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 409 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

இலங்கை கடற்படையை சேர்ந்த 836 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 551 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!