இராணுவமயமாகும் ஸ்ரீலங்கா! சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்

387shares

பாதுகாப்புப் படையினர் ஆதிக்கம் செலுத்தும வகையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கான பிரகடனத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐஎப்ஜே என்ற சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

இந்த செயலணியில் முழுமையாக இராணுவ, உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த செயலணிக்கு தலைமை தாங்க உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலணி அமைப்பானது, தனது அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக கொரோனா வைரஸை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் இலங்கை அரசாங்கத்தின் மற்றும் ஒரு செயலாகும்' என்று ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச அறங்கூறுநர் சபையின் பிராந்திய இயக்குனர் ஃபிரடெரிக் ராவ்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றவாளிகள் உட்பட்ட படைத்தரப்பின் பலரை உள்ளடக்கியுள்ள இந்த செயலணிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயலணி, பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் விமர்சகர்களை அடக்குவதற்கு மற்றொரு கருவியாக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சர்வதேச அறங்கூறுநர் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நீதித்துறை அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை பற்றி எந்த கரிசனையில் இல்லாமல், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது, 'என்று ராவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி செயலணியை நிறுவும் சிறப்பு வர்த்தமானியை ரத்துச்செய்யவேண்டும் என்று சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!