ராஜபக்ஷாக்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்! மீண்டும் களத்தில் கருணா

1060shares

ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கவே முடியாது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ராஜபக்சாக்களின் கொட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே அடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியில் நெருக்கடிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், எனினும் கடந்த 72 வருடத்தில் கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை எனவும் கூறினார்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் சில ஆசனங்கள் மட்டுமே வெல்ல முடியும் எனவும், ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை தமிழர் மகா சபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா நேற்று முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்த பின்னர் தனது பிரசாரத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்.....

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!