கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களுக்கு கடும் கோபம்: சிவசக்தி ஆனந்தன் காட்டம்

16shares

நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி காலத்தில் கூட மன்னார் மாவட்டம் அபிவிருத்தியடையாமை மக்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பல்வேறு கிராமங்களில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இடம் பெறவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசார மக்கள் சந்திப்பு நேற்று மன்னாரில் பல்வேறு கிராமங்களில் இடம் பெற்றது. மக்கள் சந்திப்பின் பின்னர் மன்னாரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கிராமப்புரங்களில் வாழும் மக்களுக்கான குடி நீர் பிரசினை உள்ளதோடு, கிராமங்களுக்கான பாதைகள் குண்றும் குழியுமாக காணப்படுகின்றது. நீண்டகாலமாக பாதைகள் திருத்தப்படாமல் இருக்கின்றது. மேலும் வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறுபட்ட பிரசினைகளுக்கு மத்தியிலே தொடர்ச்சியாக மக்கள் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக தாங்கள் பல்வேறு தேர்தல்களில் வாக்களித்து வருகின்ற போதும் எமது கிராமங்களின் நீண்ட கால பிரசினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் மக்கள் சந்திப்பின் போது கிராம மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது கூட மஹிந்த ராஜபக்ஸவை பதவியில் இருந்து இறக்கி, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக வெற்றி பெற வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்கி நல்லாட்சி காலத்தில் கூட தங்களின் கிராமங்கள் அபிவிருத்தி சம்பந்தமான எவ்வித பணிகளும் நடை பெறாமல் இருப்பது கவலையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களை பொறுத்தவகையில் வன்னி மாவட்டத்தில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

மக்கள் பல தேர்தல்களிலே நிதானமாக வாக்களித்த மக்கள். இம்முறை மக்கள் இது வரை காலமும் குறிப்பாக கடந்த 20 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்த மக்கள் மிக விரக்கி அடைந்த நிலையில் தங்களுக்கு ஒரு அபிவிருத்தியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை ஆகவே தாங்கள் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாது என்பதனை எங்களுக்கு கூறியுள்ளார்கள்.

தேசியக் கட்சியில் இருக்கின்ற சில உதிரிக் கட்சிகளுக்கும் தாங்கள் வாக்களிக்க மாட்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். நாங்களும் எமது கட்சியின் நிலைப்பாடு, எதிர் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம்.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கவும் தயாராக உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!