பிரதமர் மஹிந்தவை கடுமையாக சாடிய ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்

19shares

பொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி மஹிந்த ராஜபக்ஷ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டவிதிமுறைகளை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்கின்ற நிலையில் ஆளும் தரப்பினருக்கு ஒருவகையிலும் எதிர் தரப்பினருக்கு இன்னொருவகையிலும் சட்டம் செயற்பட்டால் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தேர்தல் சட்டவிதிகள் வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க அனைவரும் வரையறுக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகளிலேயே ஈடுபடுத்த முடியும் என்பதனால் எதிர்தரப்பு உறுப்பினர்கள் பெரிதும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!