வடி சாராயம் விற்பனை செய்தவருக்கு இன்று கிடைத்த தண்டனை

20shares

திருகோணமலை - சம்பூர் பகுதியில் வடி சாராயம் விற்பனை செய்து வந்த நபருக்கு 1,25000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிளிவெட்டி,பாரதிபுரம்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கங்குவேலி,முதளைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந் நிலையில் சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பரல் வடிசாராயமும்,ஒரு பரல் கோடா பொருளையும் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்