நாடு திரும்பிய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மகள் தனிமைப்படுத்தப்பட்டார்

304shares

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள், துருணி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பெல்ருஸ் நாட்டில் உயர் கல்வியைத் தொடர்ந்த இவர், நேற்று (28) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின் பின்னர், தற்போது 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மே மாதம் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள், இலங்கைக்கு திரும்பியுள்ளதுடன், அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல், அவரது தந்தையால் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாரென சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.

எனினும், தனது கல்வி நடவடிக்கைகள் ஜூன் மாதமே நிறைவடைவதாகவும் தான் இலங்கைக்கு வருகைத் தந்து, தனிமைப்படுத்தலை முன்னெடுக்கவில்லை என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பெல்ருஸ் நாட்டில் இருந்து, அஜித் ரோஹணவின் மகள் துருணி, காணொளி மூலம் தெளிவுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this?

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி