கோட்டாபயவின் ஏழு மாத ஆட்சியில் நாடு இராணுவ மயம் -எச்சரிக்கிறார் ஐ தே க பிரமுகர்

32shares

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் முழு நாட்டையும் இராணுவமயமாக்கியதைத் தவிர அரசாங்கம் வேறெதையும் செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார விசனம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பொருளாதாரத்தை சீரமைப்பதற்கும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது மாத்திரமே எஞ்சியிருக்கிறது.

இந்நிலை தொடருமாக இருந்தால் அரச நிர்வாகசேவைப் பரீட்சை எழுதித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல்போய்விடும்

நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தனது திறன்களால் நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஒரு தலைவர்தான் எமது தேவையேயன்றி, வெறும் வாய்வார்த்தை வீரத்தினால் பயனில்லை.

தற்போது தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல்கள் ஆணைக்குழு ஆளுந்தரப்பிற்கும் எதிர்த்தரப்பிற்கும் பொதுவாக ஒரேவிதமாக செயற்பட்டுவருகின்றது. நாங்கள் கொண்டுவந்த அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானச் செயலாற்றக்கூடிய நிலையேற்பட்டது.

எனவே உரிய சட்டதிட்டங்களைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக செயற்படுபவர்களை விடுத்து, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியாக செயலாற்றத்தக்க தரப்பினரையே இம்முறை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி