வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவருக்கு கொரோனா

16shares

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா,டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களில் நாடு திரும்பிய 300 ற்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 46 பேருக்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


you may like this

இதனையடுத்து தொற்றிற்குள்ளானவரை வெலிகந்த கொரனோ தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது